கோத்தா கினாபாலு:
இந்த ஆண்டு சுமார் 680 சட்டபூர்வ ஆவணமற்ற பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை சபா குடிவரவுத் துறை நாடுகடத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 10 அன்று சண்டக்கான் குடிநுழைவு தடுப்பு முகாம் (551 பேர்) மற்றும் தாவாவ் குடிநுழைவு தடுப்பு முகாம் (129 பேர்) ஆகிய இடங்களிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இந்த எண்ணிக்கையில் 552 ஆண்கள், 93 பெண்கள், 12 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகள் மற்றும் 2 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் அடங்குவதாக சபா குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ சித்தி சலேஹா ஹபீப் யூசோப் தெரிவித்தார்.
“இந்த குழுவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆகக்குறைந்த வயதுடைய ஆறு மாத குழந்தை முதல் 75 வயதான முதியவர் வரை இருந்தனர்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, சபா குடிநுழைவுத் துறை மொத்தம் 8,678 பேரை கடல் மற்றும் வான் வழியாக அந்தந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.