கோலாலம்பூர்: மெட்மலேசியா இன்று தொடங்கி சனிக்கிழமை (ஜனவரி 20) வரை பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகாங்கில் குவாந்தன், பெக்கான் மற்றும் ரோம்பின் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்றும், ஜோகூரில் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்ற வானிலை சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு மற்றும் முகா ஆகிய பல மாவட்டங்களில் நாளை வரை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.