தெரெங்கானு கால்பந்து லீக் சண்டையில் அரசு ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது

NAG FC மற்றும் Kesa FC கால்பந்து அணிகளுக்கு இடையே நடந்த சண்டையில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஒரு அரசு ஊழியர் ஒருவரும் அடங்குவர். சம்பவ இடத்தில் பார்வையாளர்கள் எடுத்த வீடியோக்களின் அடிப்படையில் 25 முதல் 40 வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக தெரெங்கானு காவல்துறைத் தலைவர் மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.

ஹரியான் மெட்ரோவின் படி, பதிவுகளின் அடிப்படையில், இந்த நபர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்  என்று அவர் கூறினார். விசாரணை ஆவணங்கள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த நடவடிக்கைக்காக புக்கிட் அமானிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் மஸ்லி கூறினார். கலவரம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 147 பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த வாரம், TFL தலைவர் ஹிஷாமுதீன் அப்துல் கரீம், போட்டி அதிகாரிகள் மற்றும் பணியில் இருக்கும் பாதுகாப்புக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஆழ்ந்த விசாரணை நடத்தப்படும் என்றார்.  தெரெங்கானு மாநில விளையாட்டு வளாகத்தின் செயற்கை ஆடுகளத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

மாநில இளைஞர் மேம்பாடு, விளையாட்டு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனக் குழுத் தலைவர் ஹிஷாமுதீன், கால்பந்து கிளப்புகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவத்தை “மிகவும் வெட்கக்கேடானது” என்று விவரித்த அவர்,தெரெங்கானு கால்பந்து சங்கம் முடிவெடுப்பதற்கு முன்பு TFL ஒழுங்குக் குழு அறிக்கையை ஆராயும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here