விறுவிறு விளையாட்டு, பரபரப்பான அரசியல்; வெளியானது! ‘லால் சலாம்’ படத்தின் டிரெய்லர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை மலேசியாவில் MSK சினிமாஸ் வெளியீடுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தான்யா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படம் அறிவித்ததில் இருந்தே படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் சலசலப்புகளும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அதாவது இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா. கர்நாடகாவில் இருந்து தமிழர்கள் தண்ணீரைப் பிச்சை எடுக்கிறார்கள் என்று ட்வீட் செய்த பழைய ட்வீட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது. தான்யாவின் இந்த ட்வீட்டால் ‘லால் சலாம்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு எதிர்ப்புகள் வலுத்தது. பிறகுதான் தான்யா அது போலியான ட்வீட் என்று மன்னிப்புக் கேட்டார்.

பின்பு இஸ்லாம் மற்றும் மதக்கலவரம் தொடர்பான காட்சிகளுக்காக அரபு நாடுகளிலும் படம் வெளியாகத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

It's a wrap for Vishnu Vishal and Vikranth's 'Lal Salaam' - The Hindu

மேலும், இதன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை சங்கி என்று பலர் சொல்வது கோபம் ஏற்படுத்தும் என ஐஸ்வர்யா சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் வருகிற 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முன்பு வெளியான டீசரில் ‘விளையாட்டில் மதத்தைக் கலக்க வேண்டாம்’ என்பது போன்ற வசனங்கள் கவனம் ஈர்த்தது. இப்போது வெளியாகி இருக்கும் டீசரிலும் ‘பையன் சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, சாதிச்சா ஊருக்கே பெருமை’, ‘எந்த ஊர்ல இருந்தாலும் சாமி சாமி’ தான் என அனல் பறக்கும் வசனங்கள் இருக்கின்றன.

விளையாட்டு அரசியலாகவும் அதுவே பின்பு எப்படி மதக்கலவரமாகவும் மாறுகிறது என்பதுதான் ‘லால் சலாம்’.

‘ஐந்துவேளை தொழுது சாந்தியா இருக்க பாய் இல்ல…பம்பாய்ல ஆளே வேற’ என ‘பாட்ஷா’ டச்சோடு முடிந்திருக்கிறது ‘லல சலாம்’ டிரெய்லர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here