இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்! செங்கடலில் நடந்ததென்ன?

வாஷிங்டன்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்த கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக இந்த போரானது நீடித்து வருகிறது. சண்டை நீடித்துக் கொண்டே இருப்பதால் இந்தப் போர் பிராந்திய போராக மாறுமோ என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க ஹமாஸுக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றன.

இதனால் அங்கே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏமனை சேர்ந்த இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் நடத்தும் இந்த தாக்குதலால் வணிக கப்பல் சேவையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்களை கண்டால் சரமாரியாக தாக்கி விடுகின்றன.

இதனால் செங்கடல் வழியிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் அதிகரித்து வருவதால் ஏமனில் பெரும்பாலான பகுதிகள் ஹவுதி வசமே உள்ளது. இந்த நிலையில், இன்று அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சொந்தமான கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக ஹவுதி செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், முதல் தாக்குதல் அமெரிக்க கப்பலான ஸ்டார் நாசியா மீது நடத்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் பிரிட்டன் கப்பலான மார்னிங் டைட் மீது நடத்தப்பட்டது. சிறிய படகில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எந்த சேதமும் கப்பலுக்கு ஏற்படவில்லை என்று இங்கிலாந்து கப்பல் நிறுவனம் தெரிவித்தது.

அதேபோல், அமெரிக்காவில் இருந்து வந்த மற்றொரு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்ததாகவும் கப்பலின் ஸ்டார் போர்டு பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் வெடித்தாக்குதல் நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட்கள் சிலவற்றிற்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக கிரீஸ் நாட்டு கடல் வணிக அமைச்சகம் தெரிவித்துள்ள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here