15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவருக்கு தடுப்புக் காவல்

பத்து பகாட்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினரான புதின்ம வயது பெண்ணை உடல் ரீதியாக பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வாட்டர் ஃபில்டர் கம்பெனியில் விற்பனையாளராக பணிபுரிந்த ஆடவர் ஒருவர், விசாரணைக்கு உதவுவதற்காக இன்று முதல் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் படி விசாரணை மேற்கொள்ள பத்து பகாட் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஹைலி ஷாபியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் 27 வயது சந்தேக நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நகரத்திற்குத் திரும்பிய வேளை, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பாதிக்கப்பட்டவர் தனது தாயின் மரணத்திற்குப் பின்னர் சந்தேக நபரின் குடும்பத்துடன் தங்கியிருந்தபோது, ​​குறித்த சிறுமியை இரண்டு முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர் போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது இறந்துவிட்டார், பாதிக்கப்பட்டவருக்கு 15 வயதாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது, ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டுமே போலீஸ் புகார் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here