விசுவாசமான பயனீட்டாளர்களுக்கு சன்மானம் அளிக்கும் GMK WOW DAY

கிள்ளான்:
றிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் GM Klangனின் வர்த்தக சமூகச் செயலி GMK WOW DAY திட்டத்தை உருவாக்கி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது.

GM Klangனின் வார இறுதி மொத்த விற்பனையின் சுருக்கம்தான் இந்த GMK WOW DAY திட்டமாகும்.

வரும் மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டமானது GM Klang வர்த்தக, சமூகச் செயலி பயனீட்டாளர்களுக்கு (பிரிமியம் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள்) கூடுதல் சலுகைகள் அளிக்கவுள்ளது.

இந்தத் திட்டம் மார்ச் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் முதலாவது வார இறுதியில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும். அதில் பிரிமியம் உறுப்பினர்களுக்கு இரண்டு சிறப்புச் சன்மானங்கள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக பிரிமியம் உறுப்பினர்கள் இங்குள்ள கடைகளில் உள்ள பல வகை பொருட்களை சிறப்பு விலையில் வாங்கலாம். இதில் வழக்க நிலை, ஆன்லைனைக் காட்டிலும் இன்னும் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படும்.

இது தவிர அவர்கள் இந்தத் திட்டப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் ஒவ்வொரு முறையும் 100 ரிங்கிட்டைச் செலவிடும்போது வாடிக்கையாளர்களுக்கு 10 ரிங்கிட் மதிப்புள்ள மின்னியல் பற்றுச்சீட்டும் வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு சலுகைகளும் GMK WOW DAY திட்ட நாட்களில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இது குறித்து பேசிய GM Klangனின் பிராண்ட் தொடர்பு முதன்மை நிர்வாகி நூர்சுஹாய்டா ஒஸ்மான், இந்த GMK WOW DAY திட்டமானது மொத்த விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேர்மறையான விளைவுகளைத் தரக்கூடிய ஓர் ஆக்கப்பூர்வமான திட்டமாகும்.

இது இரண்டு தரப்புக்கும் லாபத்தை அளிக்கக்கூடிய வகையிலான வர்த்தகச் செயல்பாட்டினை நிலைப்படுத்தும். இந்தத் திட்டமானது உறுப்பினர்களின் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. காரணம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்போது விசுவாசமான வாடிக்கையாளர்கள் பல்வேறு பயன்களைப் பெறுகின்றனர் என்றார் அவர்.

இதனிடையே வாடிக்கையாளர்கள் தங்களைப் பிரிமியம் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்ட பிறகு செயலி வாயிலாக அவர்களுக்குப் பிரத்தியேக கியூஆர் குறியீடு அனுப்பப்படும். பொருட்ளை வாங்குவதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் அவர்கள் இந்த கியூஆர் குறியீட்டைக் காண்பிக்க வேண்டும்.

ஸ்கேன் செயல்பாடு மேற்கொள்ளப்பட்ட பிறகு வழக்க நிலையில் அந்தச் செயலியில் பற்றுச்சீட்டுத் தோன்றும் எனவும் அவர் விவரித்தார்.

இதற்கிடையே பிரிமியர் உறுப்பினர்களாக வாடிக்கையாளர்கள் தங்களைப் பதிந்து கொண்டால் 10 ரிங்கிட் மதிப்பிலான மின்னியல் பற்றுச்சீற்று, GM Klangனின் இலவச வாகன நிறுத்துமிடம், அவ்வப்போது ஒருங்கிணைக்கப்படும் பிரச்சாரங்கள் வாயிலாக சன்மானங்கள் உள்ளிட்ட இதர பலன்களையும் பெறலாம்.

இந்த GM Klang வர்த்தகச் செயலியை App Store, Google Play Store ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here