த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கு விரைவில் செயலி அறிமுகம்

சென்னை:

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என்றும் பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் அறிமுகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. .

நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு செயலி மூலமாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக கட்சியில் குறைந்தது இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் த.வெ.க.வின் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here