சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான சாந்தன், உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். அவர் இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது.
சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.
இன்றிரவு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததாகவும், அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் அவசர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமடைந்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான பின்னரும் சாந்தன், இலங்கை செல்வதற்கு சரியான பயண ஆவணங்களின்றி இருந்ததாகக் கூறி, திருச்சி சிறப்பு முகாமில் குடிநுழைவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.