புத்ராஜெயா:
பிப்ரவரி 18 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,572 ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய வாரத்தில் 3,483 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலால் இரு இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குநர்-ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 17,388 டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு இன்றுவரை 29,113 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“டிங்கி காய்ச்சல் காரணமாக இவ்வாண்டு இதுவரை மொத்தம் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.