ஜப்பான் ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் திகைத்துப்போன ராஷ்மிகா

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்புக்கும்,நடனத்திற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

தெலுங்கில்ஆரம்பித்து தமிழில் கலக்கி தற்போது ஹிந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் நடிகை ராஷ்மிகா அதிகம் பயணம் மேற்கொள்ளக்கூடியவர் என கூறப்படுகிறது.இப்படி உலகம் சுற்றும் பறவையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா ஜப்பான் நாட்டிற்கு சென்று உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்Crunchyroll Anime Awards-2024 விருது வழங்கும் விழா நாளை (2-ந்தேதி) நடைபெற உள்ளது.இந்தநிகழ்ச்சிக்காக ராஷ்மிகா ஜப்பான் சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவருக்கு பெரும்வரவேற்பு கிடைத்தது.

ஜப்பான் ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பால் திகைத்துப்போன ராஷ்மிகா கைகளை அசைத்து மகிழ்ச்சியைவெளிப்படுத்தினார்.ஜப்பான் ரசிகர்களுக்கு தனது கைப்பட ‘ஆட்டோகிராப்’ எழுதி வழங்கினார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here