பிரிட்ஜில் வைக்கவே கூடாத அந்த 4 பொருட்கள் என்னென்ன தெரியுமா?

பிரிட்ஜ் இருக்கிறது என்பதற்காக எந்த பொருளையும் அதில் வைத்துவிட முடியாது. குறிப்பிட 4 பொருட்களை வைத்தால் அது விஷமாக மாறும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பிரிட்ஜ் எனும் குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தார்கள். இதனால் கணவன்மார்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அங்கலாய்க்கிறார்கள். பிரிட்ஜ் என்பது ஒரு பொருள் வாடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

ஐஸ் கட்டியை சேமிக்க உதவுவது போன்றவற்றிக்கு ஆகும். எனவே பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட வகைகளை வைக்கலாம். அதிலும் கடையில் இருந்து வாங்கி வந்ததும் அப்படியே வைத்துவிடக் கூடாது.

அவற்றை கழுவி ஈரத்தை துடைத்துத்தான் வைக்க வேண்டும். அழகாக கவர்களில் சுற்றி வைக்கலாம். அதற்கென மார்க்கெட்டுகளில் வலை போன்ற பைகள் எல்லாம் வந்துவிட்டன. இவற்றை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த காலங்களில் பிரிட்ஜெல்லாம் இல்லை.

நம் முன்னோர்கள் நாம் வைக்கும் பால், மோர், மாவு, காய், பழம் ஆகியவற்றை பிரிட்ஜில் வைக்காமல்தான் பாதுகாத்தனர். ஆனால் இன்று பிரிட்ஜ் இல்லாவிட்டால் கை உடைந்தது போல் ஆகிவிடுகிறது. தற்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் தினமும் பரபரப்பாக இயங்கி வேண்டியிருக்கிறது.

இதனால் சிலர் ஒரு குழம்பை இரு நாட்களுக்கு சேர்த்து வைத்து, அதை பிரிட்ஜில் சேமித்து வைத்து சூடு செய்து சூடு செய்து கொடுப்பதாக கணவன்மார்கள் நிறைய பேர் பட்டிமன்றங்களில் வேடிக்கையாக பேசுவார்கள். இது சில வீடுகளில் நிஜமாகவே நடக்கிறதாம். அதிலும் காரக் குழம்பு, புளி குழம்பு என்றால் இன்னும் இரு நாட்கள் கூடுதலாக சேர்த்து வைத்துவிடுவதாகவு்ம அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பிரிட்ஜில் உணவு பொருட்கள் வைப்பது தவறு என்கிறார்கள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், இறைச்சி குழம்பு உள்ளிட்டவைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. சமையலை தினமும் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் ஒரு 4 காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கவே கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி, சாதம் ஆகியவைதான் அந்த 4 பொருட்கள். வெங்காயத்தை பயன்படுத்தும் சிலர் வடைக்கு வெட்டிவிட்டு போதும் என்றால் வெட்டிய மீதியை பிரிட்ஜில் வைத்து வேறு எதற்காகவாவது போட்டுக் கொள்ளலாம் என நினைத்து வைப்பார்கள். ஆனால் அப்படி வெட்டிய வெங்காயத்தை வைத்தால் அது பிரிட்ஜில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி கெட்ட பாக்டீரியாக்களை அதிகப்படுத்தும்.

பூண்டு: பூண்டுகளை தோல் உரித்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து சிலர் பயன்படுத்துவார்கள். அது மிகவும் தவறு. பூண்டும் விரைவாக பூஞ்சை பிடிக்கக் கூடிய ஒரு பொருளாகும். எப்போதும் சமையல் செய்யும் போது உரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரித்து வெளியே வைத்திருக்க வேண்டும்.

இஞ்சி: இஞ்சியும் விரைந்து பூஞ்சை பிடிக்கும். இந்த இஞ்சி சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்புகளுடன் தொடர்புடையது. மேலும் தொண்டர் இருமலுக்கும் நல்லது. அப்படிப்பட்ட இஞ்சியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

அரிசி: சாதம் மாவுச்சத்தாக மாற கூடாது என்பதற்காக சிலர் அதை பிரிட்ஜில் வைத்து வருகிறார்கள். ஆனால் அரிசி வேகமாக பூஞ்சை பிடிக்கும். 24 மணி நேரத்திற்கு மேல் அரிசியை பிரிட்ஜில் வைக்கவே கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here