கோலாலம்பூர்:
“அல்லாஹ்” என்று அச்சிடப்பட்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மொத்தம் 42 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர், ஆணையர் டத்தோஸ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் ஜெயின் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
“ஒற்றுமையின்மை, பகை, இன மற்றும் சமய வெறுப்பு, தீய உணர்வுகளை ஏற்படுத்துதல், அல்லது மதத்தின் அடிப்படையில் நல்லிணக்கம் அல்லது ஒற்றுமையைப் பேணுவதற்கு தீங்கு ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக குற்றவியல் சட்டத்தின் 298A பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்திய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கு இன்னும் போலீஸ் விசாரணை கட்டத்தில் உள்ளது.
விசாரணை செயல்பாட்டில் தலையிடக்கூடிய எந்த ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.