கூச்சிங்:
சமீபத்தில் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 46 கிலோகிராம் மெத்தம்பேட்டமைனை சரவாக் சுங்கத் துறை (JKDM) கைப்பற்றியது.
இது இந்த ஆண்டு சரவாக்கில் இதுவரை நடந்த போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சோதனையில். கைப்பற்றப்பட்ட ஆகக்கூடிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் என்று, சரவாக் சுங்கத் துறை இயக்குநர் நோரிசான் யாஹ்யா கூறினார்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி மாடாங்கில் உள்ள ஒரு வீட்டில் வைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் 20 வயதிற்குட்பட்ட ஒரு நபரை தாம் கைது செய்ததாக அவர் சொன்னார்.
“குவான் யின் வாங் தேநீர் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் சுற்றப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்றும், அனைத்துப் பொட்டலங்களும் வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த நான்கு பயன்படுத்தப்பட்ட துணி மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன” என்று அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட மருந்துகள் 450,000 க்கும் மேற்பட்ட போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்று நோரிசான் கூறினார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்டவர் கூச்சிங்கைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்திருக்கலாம் என்றும், இந்த கும்பல் பல மாதங்களாக செயல்படுவதாக நம்பப்படுகிறது என்றும், மேலும் இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.