காஜாங்:
பள்ளி மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது தொடர்பில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி தொடர்பில் நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காஜாங்கில் உள்ள ஒரு பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது
சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் இரண்டு மாணவர்கள் இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று, காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் சைட் ஹசான் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் 18 முதல் 21 வயதுடைய சந்தேக நபர்கள் நால்வரும் அம்பாங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக மார்ச் 22 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.