கோலாலம்பூர்:
நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளான “அல்லாஹ்” என்ற வார்த்தையைக் கொண்ட சாக்ஸ் விநியோகம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ள சின் ஜியான் சாங் நிறுவனம், தங்கள் இயக்க உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தின் போது, பத்து பகாட் நகராண்மை கழகத்தினால் வழங்கப்பட்ட வணிக உரிமத்தின் விதிமுறைகளுக்கு குறித்த நிறுவனம் இணங்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஒரு நோட்டீஸை தங்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கியதாக சின் ஜியான் சாங் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க அவர்களுக்கு ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டது என்றும், தங்கள் எழுத்துப்பூர்வ அறிக்கையை கவுன்சில் பரிசீலிக்கும் வரை எங்கள் வணிக உரிமம் செல்லுபடியாகும். எங்கள் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறும் ஊடக அறிக்கைகள் தவறானவை” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






























