இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரதமரை சந்தித்தார்

கோலாலம்பூர்:

ற்போது மலேசியாவிற்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், நேற்று மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமை சந்தித்தார்.

மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையில் நடந்த இந்த சந்திப்பில், வர்த்தகம், கல்வி, விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது எனறு பிரதமர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.

சமீபத்தில் மலேசியா அரிசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டபோது உதவியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) கிளை வளாகத்தை இங்கு நிறுவுவதற்கு மலேசியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

இரு நாடுகளின் இந்த நட்பு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மலேசிய இந்திய உறவு தொடர்ந்து வளரட்டும் என்றும் பிரதமர் அந்தப் பதிவில் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here