டென்னிஸ்: காலிறுதியில் இந்திய ஜோடி

கோபு: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அன்கிதா, ருடுஜா ஜோடி முன்னேறியது. ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா. ருடுஜா போசாலே ஜோடி, ஜப்பானின் ஹினோ, இனுவே ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 6-1 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் இந்திய ஜோடி 6-2 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ஜப்பானின் ஒகமுராவை சந்தித்தார். முதல் செட்டை ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதை 7-6 என கைப்பற்றிய அன்கிதா, அடுத்த செட்டை 6-2 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் அன்கிதா 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here