போலீஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதல்: ஆயுதமேந்திய 5 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

பெட்டாலிங் ஜெயா: புத்ரா ஹைட்ஸ் என்ற இடத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஆயுதமேந்திய 5 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஐந்து பேரும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் குறைந்தது 50 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு 11.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாகவும் அறியப்பட்டது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர்  டத்தோ ஹுசைன் உமர் கான் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். நாங்கள் விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுப்போம், அங்கு இந்த விஷயத்தில் மேலும் தகவல்களை வெளியிடுவோம் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்தச் சம்பவத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஓட்டிச் செல்வதைக் கண்ட போலீஸ் குழு, சாரதியை சோதனைக்கு நிறுத்துமாறு உத்தரவிட்டது தெரிய வந்தது. எவ்வாறாயினும், சந்தேக நபர்கள் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து, ரோந்து வாகனத்தின் பின்பகுதியில் மோதுவதற்கு முன்னர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்தின. அதன் விளைவாக துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here