பேய்ப்படத்தில் கிளாமர் எதுக்கு.. ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி அதிரடி!

சென்னை:

நடிகர் சுந்தர் சியின் அரண்மனை படங்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு விரைவில் ரிலீசாகவுள்ளது. படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ரிலீஸ் ஆகவுள் ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

இதனிடையே இன்றைய தினம் படத்தின் டிரைலரை பட குழுவினர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பிலும் படக்குழுவினர் பேசினர்.

படம் குறித்த தங்களது பல்வேறு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பத்தி ரிகையாளர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தனர். படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருந்தார். சந்தானமும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருந்த சூழலில் இவர்களின் டேட்ஸ் ஒத்துவராததால், சுந்தர் சியே இந்தப் படத்தில் தற்போது ஹீரோவாக நடித்து முடித்துள்ளார்.

படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் சுந்தர் சி யுடன் இணைந்து நடித்துள்ளனர். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மாஸ் காட்டி வரும் சுந்தர் சி அரண்மனை படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வரு கிறார். கடந்த 2014ம் ஆண்டில் அரண்மனை படம் வெளியான நிலையில் அடுத்ததாக 2016 மற்றும் 2021 என இந்த படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நான்காவது பாகமும் உருவாகியுள்ளது.

இன்றைய தினம் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அனைவரும் பங்கேற்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சிறப்பான வகையில் தங்களது பதிலை பதிவு செய்தனர்.

சுந்தர் சியிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவரும் சளைக்காமல் பதிலளித்திருந்தார். அழகியலுக்கு முக்கியத்துவம் : பேய் படங்களில் கிளாமர் எதற்கு என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுந்தர்சி பேய் படம் என்றால் பாழடைந்த பங்களா உள்ளிட்ட சில குறியீடுகள் இருந்ததை தான் பிரேக் செய்ய விரும்பியதாகவும் தன்னுடைய படங்களில் எப்போதுமே அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சூழலில் பேய் படங்களிலும் அதை புகுத்த தான் நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே படத்தில் கிளாமர் பாடலும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது அனைத்து படங்களிலும் ஹிப் ஹாப் ஆதி ஏன் இடம்பெறுகிறார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுந்தர் சி, தான் எப்போதுமே ஒரு Comfort Zoneனில் இருப்பேன் என்றும் தனக்கு ஒருவரை பிடித்து விட்டால் தொடர்ந்து அவர்களுடன் பயணம் செய்ய தான் விரும்புவதாகவும் அதன் காரணமாக ஹிப் ஹாப் ஆதி, யோகிபாபு உள்ளிட் டவர்கள் தன்னுடைய படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருவதாகவும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

பேய் படங்களுக்கே உரிய பல்வேறு அம்சங்களுடன் இந்த ட்ரெயிலர் வெளியாகி உள்ளது. படத்தில் கிளாமர் பாட்டு ஒன்றும் சாமி பாட்டு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த சாமி பாட்டில் நடிகை குஷ்பூ நடனம் ஆடியுள்ளதை பார்க்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here