பாடுவில் உங்கள் தரவுகளை நீங்கள் இன்னும் புதுப்பிக்க முடியும்

கோலாலம்பூர்:

பாடு எனப்படும் மத்திய தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், முழுமையடையாத எந்த தகவலையும் இன்னும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

பாடுவில் பதிவு செய்யதபோது, ஒரு சில தகவல்களைத் தவறவிட்டவர்கள், அல்லது ஒருவேளை அவர்களின் அடையாளத்தை சரிபார்க்கத் தவறியவர்கள், தங்களது தகவல்களை புதுப்பிக்கவோ அல்லது பூர்த்தி செய்து முடிக்கவோ முடியும் என்று, தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறினார்.

ஆனால் கொடுக்கப்பட்ட இந்த மூன்று மாத காலக்கெடுவில் தங்கள் விவரங்களை பதிந்துகொள்ளாத எவருக்கும் இந்த சலுகை கிடைக்காது என்றார் அவர்.

மலேசியர்களைப் பற்றிய தரவுகள் அனைத்தும் பாடு தரவுத் தளத்தில் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்றும், இதில் பதிவு செய்வதன் மூலம் அரசாங்கத்தின் நன்மைகளை பெற தகுதியானவர்கள் யார் என அரசாங்கம் துல்லியமான பகுப்பாய்வு நடத்துவதற்கும் இது உதவும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here