கிழக்கு சீமையிலே திரைப்பட பாணியில் மடியேந்தி வாக்கு சேகரித்த ராதிகா

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கப்பலூர் தொகுதியில் தனது கணவர் சரத்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது ராதிகா பேசுகையில், உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக நாடாளுமன்றத்தில் போராடுவேன். இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால் எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று கூட தெரியவில்லை.

எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார். பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் அங்கிருந்த புறப்பட தயாராக இருந்த ராதிகாவிடம் திரளாக கூடியிருந்த பெண்கள் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரம் போல் பேசி காட்டுங்கள் என கூறினர்.

உடனே ஜீப்பில் நின்றிருந்த ராதிகா மடியேந்தி கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரமாகவே மாறி தழுவும் குரலில் போல் பேசி வாக்கு சேகரித்தார். அதனை அங்கிருந்த பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதேபோல் அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் ரசித்து, நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here