Help பல்கலைக்கழகத்தின் ஆக்கப்பூர்வ பிரச்சாரத் திட்டம்

(கே.வி.சுதன்)

கோலாலம்பூர்:

கல்வியின் மூலம் முத்திரை பதிக்கவும் வாழ்க்கை முழுவதும் துணையாக வரும் கல்வியைத் தொடர்ந்து கற்கும் பண்பையும் மனப் பக்குவத்தையும் நிலை நிறுத்துவதற் குமான முயற்சியை மேற்கொள்ளும் வகையில் ஒரு தர அடையாளத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு தொழிற்துறையில் சவால்களைக் கடந்து செல்வது குறித்து விவரிக்கும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்.

ஏதுவாக ஏன் முடியாது Why Not?) என்ற சவால் மிக்க கேள்விக்கணையுடன் கூடிய புதுமைப் பிரச்சாரத் திட்டத்தை ஹெல்ப் பல்கலைக் கழகம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தது.

 

புத்தாக்கமும் புத்துணர்ச்சியும் உள்ளடங்கிய இப்பிரச்சார அடையாளம் கல்வியாளர்களுக்கும் உயர் கல்வி மாணவர்களுக்கும் ஒரு துணிச்சல் மிக்க நடவடிக்கையையும் அவர்களின் கல்விப் பயணத்தில் விவேகத்தையும் தேவையான மன ஊக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களான பேராசிரியர் டத்தோ டாக்டர் பால்ச்சன் துக் ஹூங் , டத்தின் சான் லாவ் கம் யோக் இருவரும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையின் வெள்ளித்திரையில் சிறப்பு வீடியோ காணொளியின் வாயிலாகக் கருத்துகளைப் பரிமாறினர்.

கடந்த 1986-ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய இப்பல்கலைக்கழகம் எங்களுடன் இணைந்து பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளது.

நாட்டிலுள்ள எல்லா மலேசியர்களும் உயர்நிலைக் கல்வியைப் பயிலும் வாய்ப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கை உட்பட நாட்டின் கல்வித் திட்டக் கட்டமைப்பை மாற்றியமைத்தல் போன்றவையும் இதில் உள்ளடக்கம் என்று மலேசியத் தனியார் மயக் கல்வித்துறையின் முன்னோடிகளான அவ்விருவரும் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்குத் தாங்கள் எதிர்கொண்ட அனுபவப் பயணங்கள் குறித்தும் விவரித்தனர்.

மேலும், இப்புதிய முயற்சி யின் மூலம் மாணவர்கள், இளைஞர்களிடையே கேள்வி கேட்கும் உத்வேகத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் அவர் களின் கல்வி கற்கும் பயணத்தின்போது ஏற்படும் சூழ்நிலை சாத்தியங்களை உற்சாகமாக ஏற்றுச் செயல்படுத் தும் துணிவும் மனப் பக்குவமும் உண்டாகும், என்று அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் அண்டி லியூ தெக் கூய் தனதுரையில் கூறினார்.

மேற்பட்ட பிரச்சாரம் இப்பல்கலைக் கழகத்தில் பயின்றவர்களின் கல்வி அனுபவத்தினூடே புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தி பிரதிபலிக்கச் செய்யும் வகையில் நான்கு முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள் ளது. இதன் வழி ஒவ்வொரு மாணவரும் கல்வி, வாழ்க்கை, தொழில் சார்ந்த விவகாரங்களில் தங்களைத் தயார் படுத்துதல் உட்பட உடல் ஆரோக்கியம், சமூக நலன் போன்ற அம்சங்களில் மாற்றத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

இதற்கிடையே இவ்வாண்டு இறுதி வரை மேற்பட்ட பிரச்சாரத்தையொட்டி பல்வேறு சவால்களைக் கடந்து பயிற்சி மேற்கொள் ளும் சிறந்த 380 மாணவர்களுக்கு 5,000 ரிங்கிட் மதிப்பிலான சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்று இப்பல்கலைக்கழகத் தின் உயரதிகாரியான டாக்டர் கோ சீ லியோங் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here