தமிழ் புத்தாண்டு, வைசாகி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதி

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவரது துணைவியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் வைசாகி மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை மலேசிய சீக்கியர்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் இன்று தெரிவித்தனர். சகிப்புத்தன்மையும் பரஸ்பர மரியாதையும் எப்போதும் தேசிய ஒற்றுமையின் தூண்கள் என்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மன்னர் வலியுறுத்தினார்.

நான் முன்பு வலியுறுத்தியது போல், பன்முக கலாச்சார ஒற்றுமை எனக்கு மிகவும் அர்த்தமுள்ள பரிசு. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும் மக்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மிக முக்கியமானது என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார். வைசாகி தினமும் தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றும் மன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

வைசாகி நாள் என்பது சீக்கிய நாட்காட்டியின்படி அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதே சமயம் சித்திரை புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here