கோலாலம்பூர்:
நோன்புப் பெருநாள் பண்டிகைக் காலத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஓப்ஸ் செலாமட்டின் நான்காவது நாளில் மொத்தம் 1,288 விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதனுடன் சேர்த்து, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த நடவடிக்கையில் பதிவான மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5,891 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏப்ரல் 11 ஆம் தேதி மட்டும் 16 இறப்புகள் நிகழ்ந்தன, இது மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 38 ஆகக் கொண்டு வந்ததாக தேசிய காவல்துறை நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
சாலையைப் பயன்படுத்துபவர்கள் சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இடைக்கால இயக்குநர், துணை ஆணையர் டத்தோ முகமட் நஸ்ரி ஓமர் கூறினார்.