கோல தெரங்கானு, ஷரியா உயர் நீதிமன்றத்தால் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்ட மாநிலத்தில் முதல் பெண் “கல்வாட்” குற்றவாளியாக தனித்து வாழும் தாய்க்கு வழங்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயதான நூர்ஃபி அமிரா நவிக்கு தெரெங்கானு ஷரியா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ரோஸ்டி ஹருன் தண்டனை விதித்தார்.
அவருக்கு ஆறு பிரம்படி தண்டனை மற்றும் 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபாரத்தை கட்டத் தவறினால் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஷரியா குற்றவியல் குற்றங்கள் (தக்சிர்) (தெரெங்கானு) (திருத்தம்) சட்டம் 2022 இன் பிரிவு 31 (b) இன் கீழ், கெமாமானில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 31 மாலை சுமார் 3.15 மணி. தனது கணவர் அல்லது மஹ்ரம் இல்லாத 40 வயது ஆணுடன் இருந்ததாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் 2018 இல் இதேபோன்ற குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதோடு மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஷரியா கிரிமினல் குற்றங்கள் (தக்சிர்) (தெரெங்கானு) (திருத்தம்) சட்டம் 2022 இன் அடிப்படையில், இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு, குற்றவாளிக்கு ஆறு தடவைகள் வரை தண்டிக்கப்படலாம். அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யத் தவறினால், குழந்தையுடன் இருக்கும் நூர்பிஃபி அமிரா மீதான பிரம்படி தண்டனையை மே 6 ஆம் தேதி மாராங் சிறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ரோஸ்லி உத்தரவிட்டார்.
தீர்ப்பை வழங்கும்போது, மீண்டும் இதேபோன்ற குற்றத்தைச் செய்யாமல் இருக்க உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு நூர்ஃபி அமிராவுக்கு ரோஸ்டி அறிவுறுத்தினார். கோலோக்கில் (தாய்லாந்தில்) திருமணம் செய்து கொள்ள வேண்டாம். திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னீர்கள். ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.








