கோலாலம்பூர்:
கிளானா ஜெயா LRT ரயில் சேவை இன்று காலை 6 மணி முதல் வழக்கம் போல் இயங்கும் என்று ரேபிட் ரயில் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் கிளானா ஜெயா வழித்தடத்தில் LRT ரயில் சேவை அட்டவணையானது, குறிப்பாக பரபரப்பான நேரங்களில் மூன்று நிமிடங்களுக்கும் ஒரு தடவையும், நெரிசல் குறைந்த ஏனைய நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கு ஒன்றும் என்ற அதிர்வெண்ணுடன் அவை இயங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
“இருப்பினும், கிளானா ஜெயா, தாமான் பஹாகியா மற்றும் ஆசியா ஜெயா LRT நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட் போன்ற சில வசதிகள் இன்னும் வேலை செய்யவில்லை என்றும், பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது என்றும், எனவே பயணங்களின்போது சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகள், ஸ்டேஷன் ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்,” என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை கிளானா ஜெயா LRT வழித்தடத்தில் மின்னல் தாக்கியதால், அங்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.