கேன்டிடேட் செஸ்; புள்ளிப்பட்டியலில்   குகேஷ் முதலிடம்

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்தச் சுற்றில் பிரான்சின் அலிரெஸா பிரூஸ்ஜாவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13ஆவது சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ கருவானாவிடம் தோல்வி கண்டார்.

மற்றோர் இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பைஜானின் நிஜாத் அபசோவ் உடன் டிரா செய்தார். 13 சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 4 இடங்களில் முறையே ரஷ்யாவின் இயன் நேபோம்னியாச்சி (8 புள்ளி), அமெரிக்காவின் ஹிகாரு நகாமுரா (8 புள்ளி), அமெரிக்காவின் பேபியானோ கருவானா (8 புள்ளி) உள்ளனர்.

இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் குஜராத்தி 5.5 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர். 14ஆவது சுற்றில் வெற்றி பெற்றால் கேன்டிடேட் செஸ் தொடரை குகேஷ் கைப்பற்றுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here