சதுரங்கப் போட்டியில்  மெந்தகாப் குழுவகத்  தமிழ்ப்பள்ளி  மாணவர்கள் சாதனை 

பி.ராமமூர்த்தி

 

மெந்தகாப்,

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி  தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஷா  ஆலாமில் நடைபெற்ற  தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான  சதுரங்கப் போட்டியில் மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளியைப் பிரதிநிதித்து 11 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நாடு தழுவிய அளவில் சுமார் 1,200 மாணவர்கள் கலந்துகொண்ட  இச்சதுரங்கப் போட்டியில் 8 வயது பெண் மாணவர் பிரிவில் மாணவி கவினா ஸ்ரீ  முருகன் மூன்றாம் நிலை பரிசினை வென்றார். 10 வயது மாணவி பிரிவில் கு.ஐஸ்வர்யா ஐந்தாம் நிலையிலும் 12 வயது பெண் மாணவி பிரிவில் கு.கவின்யா 26ஆவது  நிலையிலும் பரிசை வென்றனர்.  மாணவர்களுக்கு இம்மாணவர்களுக்குக் கேடயமும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த  ஆசிரியை ஞா.அனுராதா, இணைபாடப் பிரிவு துணைத் தலைமையாசிரியர் ஜெ.செல்வேந்திரன், ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வாசுகி குப்பன்  நன்றி கூறியதுடன் இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here