சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம். தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் அவரின் தொகுதி பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. தொகுதியில் கடினமான போட்டி நிலவியது. தொடக்கத்தில் வெற்றி வாய்ப்பிற்கு அருகில் கூட அவர் இருந்ததாக கணிப்புகள் வந்தன. இருந்தாலும் போக போக கள நிலவரங்கள் அந்த தலைவருக்கு எதிராக சென்றன.
காரணம்.. அந்த தொகுதியில் அந்த கட்சி தலைவர் பார்த்த உள்ளடி வேலைகள்தான் என்கிறார்கள். கட்சியின் டாப் லீடர் ஒருவர்.. இந்த நிர்வாகி ஜெயிக்க கூடாது என்று சில உள்ளடி வேலைகளை பார்த்து உள்ளார். கட்சிக்கு களங்கம் வந்தால் கூட பிரச்சனை இல்லை. இந்த நிர்வாகி மட்டும் ஜெயிக்கவே கூடாது என்பதில் அந்த தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளாராம். கட்சி தகவல்களை வெளியே சொன்னது, சில சீக்ரெட் விஷயங்களை அப்படியே போட்டு வெளியே உடைத்தது என்று அந்த தலைவர் மூத்த நிர்வாகிக்கு எதிராக செய்ய கூடாத செயல்களை எல்லாம் செய்து உள்ளாராம்.
சர்வே: இப்போது தேர்தல் முடிந்த நிலையில் இது பற்றி சர்வே எடுத்துள்ளார். அதில் வெற்றிக்கு அருகில் இருந்த தான் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்ற முடிவை அறிந்துள்ளார். இதனால் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம். தனது மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி பிற மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு வேறு கட்சிக்கு செல்லும் திட்டத்தில் உள்ளாராம். முக்கியமான பொறுப்பில் உள்ள அவர் கட்சியை உடைத்துக்கொண்டு செல்லும் முடிவில் உள்ளாராம். இதனால் சில கசப்பான விஷயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் கூட.. மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று இவர் கட்சியை விட்டு செல்லும்.. அல்லது கட்சியை மொத்தமாக உடைக்கும் முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். மேல்மட்ட நிர்வாகிகளோ அவர் செல்வது ஓகே.. ஆனால் கட்சியை எல்லாம் உடைக்க முடியாது. பல நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு மேல் ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
தேர்தல் ஓவர்: முதல் கட்ட தேர்தல் கடந்த வாரமே முடிந்துவிட்டது. தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. 26ம் தேதி ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமா தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.