வருடத்திற்கு ஒரு படம்.. ‘கில்லி’ ரீ ரிலீசால் விஜய்க்கு பறக்கும் கோரிக்கை: தளபதி மனம் மாறுவாரா.?

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘கில்லி’ படத்தின் ரீ ரிலீஸை தற்போது திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் விஜய். கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் மாஸ் காட்டி கொண்டிருக்கிறார். அண்மையில் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கினார். இதனையடுத்து தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும், எனவே ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் அறிவித்தார். விஜய்யின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தில் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் மற்றும் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட ‘கோட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையில் விஜய்யின் ‘கில்லி’ படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’, கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி தரணி இயக்கத்தில் கில்லியாக ரீமேக் செய்யப்பட்டது. தரமான கமர்ஷியல் கலவையாக வெளியான இப்படம் விஜய்யின் கெரியரில் முக்கிய இடத்தை பிடித்தது. அத்துடன் ‘கில்லி’ படம் வசூலில் சக்கை போடு போட்டது.

இது தொடர்பான வீடியோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ‘கில்லி’ ரீ ரிலீசில் தியேட்டரை நடக்கும் அலப்பறைகளை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், ‘இதெல்லாம் விட்டுட்டு போறீயா அண்ணா’ என வருத்தமாக கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி அரசியலுக்கு போனாலும் வருடத்திற்கு ஒரு படம் பண்ணினால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் தற்போது இணையத்தில் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரீ ரிலீசில் மாஸ் காட்டி வருகிறது. புதிய படங்களுக்கு கிடைக்கும் அளவிற்கு நிகரான வரவேற்பு தற்போது கில்லிக்கும் கிடைத்து வரும் நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து கெளரவப்படுத்தினார். அத்துடன் வருடத்திற்கு ஒரு படமாவது நடியுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக்கேட்டு விஜய்யும் சரியென தலையை ஆட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here