நீலாய்:
கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு ஏதுவாக 20 மோப்ப நாய்கள் சுங்கத்துறைக்கு வழங்கப்படுகிறது.
அவற்றில் லாப்ரடோர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் ஆகிய இனங்கள் வழங்கப்பட உள்ளன என்று, சுங்கத்துறை துணை இயக்குநர் ஜெனரல் (அமலாக்கம் மற்றும் இணக்கம்) டத்தோ சசாலி முகமட் கூறினார்.
1.9 மில்லியன் ரிங்கிட் செலவாகும் இந்த மோப்ப நாய்கள் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு கொண்டு வரப்படும் என்று அவர் சொன்னார்.
“இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 843 கிலோ எடையுள்ள, சுமார் RM30 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைமருந்துகளை உள்ளடக்கிய 139 கபோதைபொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 73% கூரியர் மூலமானவை என்று அவர் கூறினார்.
எனவே அதிக மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம், போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சி இரட்டிப்பாகும் என்பதில் எந்த ஐயமுமில்லை என்றார் அவர்.