உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதஉதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் பெட்ரிக்எனப்படும் ஏவுகணை தடுப்பு அமைப்பு, ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here