குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 23 வரை மாவட்டத்தில் மொத்தம் 41 திறந்தவெளி எரிப்பு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று தலைவர் நோர் அசிசி சே நோ கூறினார். இந்த வறண்ட காலங்களில் தோட்டங்கள், பண்ணைகள் மற்றும் காடுகளில் எரியும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த இடைக்கால பருவமழை காலத்தில் திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறு தோட்ட மற்றும் பண்ணை உரிமையாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் இன்று பண்டார் பாருவில் லயன்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த ஹரி ராயா விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தீபகற்பத்தில் உள்ள 10 பகுதிகள் நிலை 1 அல்லது முன்னெச்சரிக்கை வெப்ப அலை எச்சரிக்கையை பதிவு செய்ததாக அறிவித்தது. இதில் பாசீர் மாஸ்,கோல க்ராய், குவா மூசாங், தானா மேரா மற்றும் கிளந்தானில் உள்ள ஜெலி ஆகியவை அடங்கும். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று திணைக்களம் கணித்துள்ளது.