நாசிக்கண்டார் உணவகத்தில் சிவப்பு சாயம் வீசிய மூவருக்கு போலீஸ் வலைவீச்சு!

புக்கிட் மெர்தாஜாம்:

தாமான் மஞ்சோங் புபோக்கில் இன்னும் திறக்கப்படாத நாசி கண்டார் உணவகத்தின் முன் சிவப்பு சாயம் உட்பட பல பொருட்களை வீசியதாக நம்பப்படும் மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக தென் செபெராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஹெல்மி அரிஸ் கூறினார்.

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பவம் நடந்த கடை இரண்டு மாடிகளை கொண்டது என்றும், அவ்வுணவகம் இன்று திறக்கப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது என்றார் அவர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான தகவலின் பேரில், சம்பவம் கடந்த வியாழனன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here