பேங்காக்:
விமானங்கள் உயரப் பறக்க, கீழே விமான நிலைய ஓடுபாதையில் நூற்றுக்கணக்கானோர் காலை ஐந்து மணிக்கே கூடத் தொடங்கினர்.
தாய்லாந்தைச் சேர்ந்த யோகா ஆர்வலர்களுடன் வெளிநாட்டினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தின் மூன்றாவது ஓடுபாதைக்கான கட்டுமானப் பணிகள் நடந்துவரும் வேளையில் அங்கே சுமார் 500 யோகா ஆர்வலர்கள் தங்களின் பாய்களோடு கூடினர்.
இளநீர், குளிர் தேநீர், தண்ணீருடன் அவர்கள் பெண்களிடையே ஆண்கள் ஆங்காங்கே தென்பட்ட இந்த யோகா நிகழ்வு, புதுமையாக உள்ளதால் வெளிநாடுகளைச் சேர்ந்தோரும் இதில் கலந்துகொள்ள முன்வந்ததாகக் கூறப்படுகிறது.