லண்டனிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

லண்டன்:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் சாந்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கைதை கண்டித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, தூதரக கட்டிடத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடந்தது. இதில் ஒரு அதிகாரி காயமடைந்தார்.இந்திய தேசிய கொடியையும் அவமரியாதை செய்யப்பட்டது.

இந்த தாக்குதல் வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில்,இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள ஹவுன்ஸ்லோவை சேர்ந்த இந்தர்பால் சிங் காபாவை என்ஐஏ நேற்றுமுன்தினம் இந்தியாவில் கைது செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here