ஜோகூர் பாரு: வயது குறைந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என எம்.குமார் தெரிவித்துள்ளார். பொந்தியான் போலீஸ் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள 29 வயதான சந்தேக நபரின் விளக்கமறியல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) முடிவடையும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் கூறினார்.
சந்தேக நபர் தற்போது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் புக்கிட் அமானிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் அவருக்கு கடிதம் கொடுப்போம். நீதிமன்ற வழக்கு முடியும் வரை பணியில் இருந்து இடைநீக்கம் அமல்படுத்தப்படும் என்று அவர் ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். தாமான் ஜோகூர் ஜெயாவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) ஶ்ரீ ஆலத்தில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.