மீனம் -இனி எல்லாமே வசந்தம்தான்

(பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரையில்)

அன்பான மீன ராசிக்காரர்களுக்கு கடந்த ஓராண்டு ஆண்டுகாலமாக அதாவது கடந்த குரு பெயர்ச்சியிலிருந்து இந்தக் காலகட்டம் வரை குரு பகவான் ராசிக்கு 2ஆம் இடத்தில் வீற்றிருந்து கொண்டு பல வகையில், பல வழிகளில் பலவிதமான நன்மைகளைச் செய்து வந்தார் என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது.

பலவிதமான சுப நிகழ்ச்சிகள், நல்ல நிகழ்ச்சிகள் நிறையவே நடந்து முடிந்து மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முயற்சி செய்த அனைத்துவிதமான காரியங்களும் சாதகமாகவும் வெற்றியாகவும் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது.

மேலும் கடந்த 2ஆம் இட குருவின் காலத்தில் சொந்த வீடு வாங்கி அல்லது கட்டி முடித்து கிரகப் பிரவேசம் நடந்து முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சிலருக்கு புதிதாக சொந்தத் தொழில், வியாபாரம் ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பச் சூழ்நிலைகள் வந்து, நல்லபடியாகவே நடந்து வருகிறது என்றுகூடச் சொல்லலாம். எதிர்பாராத சில நன்மைகள் நடந்தது என்றுகூடச் சொல்ல இடமிருக்கிறது. மேலும் கடந்த 2ஆம் இட குருவால் உங்களது நீண்ட நாளைய ஆசை, கனவு நிறைவேறியது என்றும் சொல்லலாம்.

இப்படியாக எல்லா வகையிலும் மிகவும் சிறப்பாகவும் யோகமாகவும் விசேஷமாகவும் நடந்து வந்திருக்கும் வேளையில், வரும் 1.5.2024 அன்று குருபகவான் பெயர்ச்சியாகி ராசிக்கு 3ஆம் இடத்துக்கு வந்து சேர்வது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

அதாவது  இந்த 3ஆம் இட குருவின் காலத்தில் அநாவசிய சிக்கல்கள், வீண் பிரச்சினைகள், வீண் தொந்தரவுகள், வீண் வம்புகள் இப்படி மாதத்திற்கு ஒன்று என்று வீடு தேடி வந்து சேரும் வாய்ப்புள்ளது. மேலும் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனக்கவலைகள், மன உளைச்சல்கள் வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இந்தச் சமயத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் இடிக்குது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரைக்கும் இருந்து வந்த குருபலமும் இப்போது இல்லாமல் போனதுதான் மிச்சம். இந்தக் காலகட்டத்தில் எந்தவிதமான சுபநிகழ்ச்சியோ, நல்ல நிகழ்ச்சியோ கிட்டத்தில் வந்து தட்டிப்போவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் இந்த 3ஆம் இட குருவின் காலத்தில் எதைத் தொட்டாலும் தடங்கல்கள், தடைகள், முட்டுக்கட்டைகள் வந்து சேர்வதற்கும் எதைத் தொட்டாலும் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போவதற்கும்தான் சந்தர்ப்பமிருக்கிறது. மேலும் இந்த 3ஆம் இட குருவால் உடல் நலத்தில் கூட சிறு, சிறு தொந்தரவுகள், பிரச்சினைகள், குறைபாடுகள் ஏற்பட்டு சிறிதளவு வைத்தியச் செலவுகள் வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் ஒரு சிலருக்கு அடிக்கடி தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், கைகால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை இப்படியாக சில புதிய தொந்தரவுகள் ஏற்படுவதற்கும் சிறிதளவு வைத்தியச் செலவுகளுக்குப் பின் அனைத்தும் குணமடைவதற்கும் அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது.

மற்றபடி இப்போது 3ஆம் இட  குரு அங்கிருந்து ராசிக்கு 7ஆம் இடம், 9ஆம் இடம் 11ஆம் இடம் ஆகிய இடங்களைப் பார்க்கின்றபடியால் எல்லா பிரச்சினைகளுமே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரியே போய்விடும்.

அதனால் இந்தச் சமயத்தில் பெரிதாக எதற்காகவும் பயப்படவோ, கவலைப்படவோ தேவை இல்லை. இருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் மனதளவில் ஏதாவது ஒரு குழப்பம், கவலை  இருந்து கொண்டேதான் இருக்கும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் இந்தக் காலகட்டத்தில் எல்லா விஷயங்களிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாகவும் உஷாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.  இந்தச் சமயத்தில் இதுவரை இருந்து வந்த குருபலமும் இல்லாமல் போவதால் எந்தவிதமான சுப நிகழ்ச்சியோ நல்ல நிகழ்ச்சியோ கிட்டத்தில் வந்து தட்டிப் போவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது.  மேலும் இப்போதெல்லாம் வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து வரக்கூடிய செய்திகள், தகவல்கள்கூட மனதுக்கு குழப்பத்தையும் சஞ்சலத்தையும் மன உளைச்சலையும் தரக்கூடியதாகவே இருக்கும்.  அநாவசிய சிக்கல்கள், வீண் தொந்தரவுகள், வீண் வம்புகள், வீடு தேடி வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. உஷார் தேவை. மேலும் இந்தச் சமயத்தில் செய்து வரும் தொழில், வியாபாரம்கூட மந்தமாகவும் வருமானம் குறைவாகவும் செலவு கூடுதலாகவும் நடப்பதற்குத்தான் வாய்ப்புள்ளது.

 இந்தச் சமயத்தில் எந்தவொரு காரியத்தில் ஈடுபட்டாலும் தடங்கல்கள், தடைகள், முட்டுக்கட்டைகள் வந்து சேர்வதற்கும் எதைத் தொட்டாலும் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போவதற்கும்தான் சந்தர்ப்பமிருக்கிறது. வரவேண்டிய  பணம், பழைய பாக்கிகள்கூட சமயத்திற்கு கைக்கு வந்து சேராமல் காலம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

செய்து வரும் தொழில், வியாபாரம்  மந்தமாக இருக்கும். ஆனால் இவை யாவுமே வரும் 8.10.2024 முதல் 3.2.2025 வரையில் உள்ள 4 மாதத்திற்கு தலைகீழாக மாறிவிடும் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது இந்தக் காலகட்டம் குருபகவான் வக்கிரத்தில் சஞ்சரிக்கும் காலமாதலால் இந்த 4 மாதத்திற்கு மிகவும் சிறப்பாகவே காணப்பட்டு வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது.

அதாவது இந்தச் சமயத்தில் எல்லா வகையிலுமே மனதுக்கு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கும் எதுவானாலும் உடன் கைக்கு வந்து சேர்வதற்கும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேர்வதற்கும் முயற்சி செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காண்பதற்கும் வெற்றியடைவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

மேலும் வேலை தேடும் நபர்களுக்கு  உடனடியாக வேலை கிடைப்பதற்கும் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உயர்வு வந்து சேர்வதற்கும் அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது. மேலும் இதுவரை தடங்கலாகி வந்திருந்த சுப நிகழ்ச்சிகள், நல்ல நிகழ்ச்சிகள் இப்போது நல்லபடியாக நடந்தேறுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. உடல் நலத்தில் எந்தக் குறைபாடுகளும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாகவே காணப்பட்டு வருவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்தக் காலகட்டத்தில் தொட்டது துலங்குவதற்கும் நினைத்தது நினைத்தபடி நடந்தேறுவதற்கும்  எதிர்பார்க்கும் எதுவானாலும் உடன் கைக்கு வந்து சேர்வதற்கும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேர்வதற்கும் முயற்சி செய்யும் காரியங்கள் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் காண்பதற்கும் வெற்றியடைவதற்கும் நீண்ட நாளைய மனக்கவலைகள், மனக்குழப்பங்கள், மறைந்து மகிழ்ச்சி காணப்பட்டு வருவதற்கும் செய்து வரும் சொந்தத் தொழில், வியாபாரம் நல்லவிதமாக நடந்து வருமானம் கூடுதலாக வருவதற்கும் வேலை தேடும் நபர்களுக்கு உடன் கிடைப்பதற்கும் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உயர்வு வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிறகு வரும் 4.2.2025 முதல் 13.5.2025 வரைக்கும் உள்ள மூன்றரை மாத காலத்திற்கு  மீண்டும் நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது. (குருபகவான் வக்கிர நிவர்த்தியாகி 3ஆம் இடத்தில் நேர்கதியில் சஞ்சரிக்கும் காலமென்பதால்).

மீன ராசிக்காரர்களுக்கு 1,3,5,9 அதிர்ஷ்ட எண்கள். செவ்வாய், வியாழன் அதிர்ஷடக் கிழமைகளாகும். சிவப்பு, பொன் நிறம் அதிர்ஷ்ட நிறங்கள். பவளம், கனகபுஷ்பராகம் அதிர்ஷ்டக் கற்கள். இஷ்ட தெய்வம் ஸ்ரீ  முருகன்.  வணங்க வேண்டிய கிரகம் ஸ்ரீ குருபகவானாகும். ஒருமுறை ஸ்ரீ பழநி தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வருவது சாலச்சிறந்ததாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here