2ஆவது பெரிய கட்சி எது? மாறி மாறி சர்வே எடுத்த அதிமுக, பாஜக

சென்னை: லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் முடிந்துள்ள நிலையில் இரண்டாவது பெரிய கட்சி எது என்ற சர்வேவை உட்கட்சி ரீதியாக அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நடத்தி உள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

2024 லோக்சபா தேர்தல் உட்கட்சி கணிப்புகளை பார்க்கும் முன் 2019 லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற தனி தனி வாக்கு சதவிகிதங்களை பார்க்கலாம். திமுக கூட்டணி 53.15% வாக்கு சதவிகிதங்களை பெற்றது திமுக 33.52% வாக்கு சதவிகிதங்களை பெற்றது காங்கிரஸ் 12.61% வாக்கு சதவிகிதங்களை பெற்றது அதிமுக கூட்டணி 30.57% வாக்கு சதவிகிதங்களை பெற்றது.அதிமுக 19.39% வாக்கு சதவிகிதங்களை பெற்றது பாஜக 3.66% வாக்கு சதவிகிதங்களை பெற்றது பாமக 5.36% வாக்கு சதவிகிதங்களை பெற்றது தேமுதிக 2.16% வாக்கு சதவிகிதங்களை பெற்றது நாம் தமிழர் கட்சி 3.90% வாக்கு சதவிகிதங்களை பெற்றது.

பாஜக சர்வே: இதில் பாஜக உட்கட்சி ரீதியாகவும், மத்திய உளவுத்துறை சார்பாக அனுப்பட்ட ரிப்போர்ட்டுக்களை எடுத்துள்ளதாம். அதில், தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் பலரும் பிரபலமாக இருந்தனர். ஆனால் லோக்சபா தேர்தலில் பணிகளை செய்ய பூத் கமிட்டி ஆட்கள் இல்லை. பல பூத் கமிட்டி வெற்றிடமாக இருந்தது. இருந்த பூத் கமிட்டியில் கூட ஆட்கள் 2-3 பேர் மட்டுமே இருந்தனர் என்று தகவல் சென்றுள்ளது.அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவு. ஆனால் வாக்கு சதவிகிதம் 2-3 சதவிகிதம் உயர வாய்ப்புகள் உள்ளன என்று பாசிட்டிவ் ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

அதிமுக சர்வே: அதே சமயம் அதிமுக உட்கட்சி ரீதியாக மாவட்ட செயலாளர்கள் மூலம் சர்வே எடுத்துள்ளதாம். அதில் அதிமுக இரண்டாவது பெரிய கட்சி. ஈரோடு, கள்ளக்குறிச்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் வெற்றி உறுதி இல்லை. திருச்சி, தேனி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக கண்டிப்பாக இரண்டாம் இடத்தை பெறும். தென் மாவட்டங்களில் நெல்லை, குமரி , தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாஜக இரண்டாம் இடம் பெறலாம். திண்டுக்கல்லில் ஷாக் திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. மற்றபடி தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி அதிமுகதான் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

திமுக ஆலோசனை: 024 லோக்சபா தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது. அதன்படி தேர்தல் தொடர்பாக வந்த முக்கோண ரிப்போர்ட் அது என்கிறார்கள். பென் என்ற திமுகவிற்கு நெருக்கமான அமைப்பு நடத்திய சர்வே + உளவுத்துறை சர்வே + மாவட்ட நிர்வாகிகள் எடுத்த சர்வே. திமுக தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 40ல் வெல்லும். கோவையில் திமுகவே வெல்லும். அங்கே இரண்டாம் இடம் அதிமுகவிற்கு கிடைக்கும். வட மாவட்டங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும். திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடுகளில் லேசான இழுபறி இருந்தாலும் திமுகவே வெல்லும். ஆனால் தென் மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லாது. காரணம் அங்கே வாக்குகள் கடுமையாக பிரிந்துள்ளது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

புயலை கிளப்ப போகிறது: இந்த சர்வே முடிவுகள் மாறலாம் என்பதால் உண்மையான முடிவுகள் வரும் போதே தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி எது என்பது வரும்.. அந்த முடிவுகள் தமிழக அரசியலில் புதிய புயலை கூட கிளப்பலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here