ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில்ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.