கண் பார்வை குறையுடைய சாந்தினிக்கு உதவி வழங்கிய MAKFU இளைஞர்கள்

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறுவர். இளைஞர்களில் பலர் தவறான வழிகளில் செல்கின்றனர் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர்.  ஆனால்  தற்போதைய நவீன கால கட்டத்தில் வேலை பளுக்கு இடையில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மலேசிய ஏகே பேன்ஸ் யுனைடெட்  இளைஞர்கள் (MAKFU)  கண் பார்வை குறையுடைய  சாந்தினி ஆறுமுகம் என்ற  மாதுவிற்கு உதவிகளை வழங்கினர்.

கிள்ளான் தாமான் செந்தோசா பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் சாந்தினி ஆறுமுகத்திற்கு  சிறு வயதில் மற்றவர்களை போல் பார்வை இருந்ததாகவும் ஆனால் ஒரு விபத்தினால் பார்வை குறைப்பாடு ஏற்பட்டதாக MAKFU தலைவர் யோகேஸ்வரன் @ சசி தெரிவித்தார். சாந்தினி ஆறுமுகத்தின் வியாபாரத்திற்கான தளவாடங்கள், மற்றும் கூடாரம் (கேம்மா) உள்ளிட்டவைகளை MAKFU சார்பில் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக எங்களால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு வழங்கி வருகிறோம். எங்களின் இந்த சேவை நல்லுளங்களின் ஆதரவோடு இனிவரும் காலங்களில் தொடரும் என நம்புவதாக சசி கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here