Home Top Story சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

புக்கிட் மெர்தாஜாம்:

வயிற்றில் ஏற்பட்ட அழற்சியின் காரணமாக, சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் நார் ஜம்ரி லத்தீஃப், இங்குள்ள செபெராங் ஜெயா மருத்துவமனையின் (HSJ) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர் ஜம்ரியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டதாக, சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு பாஸ் கமிஷனருமான முஹமட் ஃபௌசி யூசோஃப் கூறினார்.

“அவருக்கு வயிற்று வலி இருப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு சுங்கை பாக்காப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அதே நாளில் அவர் HSJ க்கு மாற்றப்பட்டார் என்றும் கூறினார்.

“ஜம்ரி தற்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரைச் சந்திப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் கூறிய அவர், அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுகிறோம்,” என்றும் அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version