உலகின் மிக ஆழமான BlueHole-ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோவின் Yucatan தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள செத்துமால் விரிகுடாவில் (Chetumal Bay) தாம் ஜா ப்ளூ ஹோல் (Taam Ja’ Blue Hole) கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீருக்கடியில் உள்ள ஆழமான புதைகுழி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழியின் அடிப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இது கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 1,380 அடி (420 மீட்டர்) கீழே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Frontiers in Marine Science இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, துளையின் நிலைமைகளைப் புரிந்துகொள்ள Scuba diving பயணம் டிசம்பர் 6, 2023 அன்று தொடங்கப்பட்டது. கடத்துத்திறன், வெப்பநிலை மற்றும் ஆழத்தை தீர்மானிக்க ஆய்வு நடத்தப்பட்டது. இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிக ஆழமான கடற்பரப்பாக மாறியது.
குழியின் அடிப்பகுதி இன்னும் எட்டப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரீபியன் கடலில் உள்ள கடலோரப் பாறைக் குளங்களின் வெப்பநிலை மற்றும் உவர்ப்புத் தன்மை ஒத்ததாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த பெருங்குழியில் ராட்சத சுரங்கங்கள் மற்றும் குகைகள் உள்ளன.