கோத்தா பாரு:
தற்போது கிளந்தானில் நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, அங்கு தலைதூக்கியுள்ள தண்ணீர் விநியோகப் பிரச்சினையைத் தீர்க்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு அறிவித்தார்.
கிளந்தான்வாசிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவே இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மடானி அரசாங்கத்தின் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின்போது உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு சொன்னார்.
“தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் கிளந்தான் ஆறு வறண்டுவிட்டதாகவும், இதனால் பலர் பாதிக்கப்படுவதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, குடிநீர் குழாய்கள் வாங்குவது உள்ளிட்ட ஒதுக்கீட்டை பயன்படுத்தி திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்,” என்று,
பிரதமர் கூறினார்.