இசை குடும்பத்தை சேர்ந்த ஜெய், தளபதி விஜய்யின் தம்பியாக நடித்து திரையுலகிற்கு வந்தார். பகவதி படத்தில் விஜய்யின் செல்லத் தம்பியாக நடித்தார். ஜெய் வாழ்வில் காதல் வந்தபோதிலும் அது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் அவருக்கும், நடிகை பிரக்யா நக்ராவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாம் என பேச்சு கிளம்பியது.
தான் பிரக்யாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு, கடவுளின் ஆசியுடன் புது வாழ்க்கை துவங்கியதாக தெரிவித்தார் ஜெய். பிரக்யாவும் அதே புகைப்படத்தை வெளியிட்டார். பிரக்யா கழுத்தில் புது தாலி, ஜெய் கையில் பாஸ்போர்ட், டிக்கெட்டை பார்த்தவர்களோ, திருமணமாகி தேனிலவுக்கு போகிறார்கள் என நினைத்தார்கள்.
அப்பொழுது தான் புகைப்படத்தை உற்றுப் பார்த்தபோது கார் கண்ணாடி வழியாக கேமரா தெரிந்தது. அதன் பிறகே இது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம், ஜெய்க்கும், பிரக்யாவுக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதே தெரிந்தது. அந்த கேமரா தெரியாமல் புகைப்படம் எடுத்திருந்தால் புகைப்படம் வேற வெலவில் டிரெண்டாகி படத்திற்கு இதைவிட விளம்பரம் கிடைத்திருக்கும்.
தெளிவா போட்டோ எடுத்த நீங்க, பின்னாடி இருக்கும் கேமராவை மறைக்க மறந்துவிட்டீர்களே. மண்டை மேலே இருக்கும் கொண்டையை மறந்ததால் நீங்கள் சொல்லாமலேயே உண்மை தெரிந்துவிட்டது ஜெய் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜெய்க்கு 40 வயதாகிவிட்டது. இன்னும் மொரட்டு சிங்கிளாக இருக்கும் ஜெய்யை நிஜமாகவே மாலையும், கழுத்துமாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் அவர் தான் நடித்து வரும் பேபி அன்ட் பேபி படத்திற்காக இப்படி ஒரு வழியில் விளம்பரம் தேடியிருக்கிறார். ஜெய் செய்தது சரி தான். ஆனால் அவரின் ரியல் மனைவியை பார்க்கத் தான் ரசிகர்கள் துடிக்கிறார்கள்.
பேபி அன்ட் பேபி படப்பிடிப்பு விரைவில் முடியவிருக்கிறது. இந்நிலையில் இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டு, மக்களே நான் பேபி அன்ட் பேபி படித்தில் நடித்து வருகிறேன் என அழகாக தெரிவித்துவிட்டார் ஜெய். இந்த போட்டோ ஐடியா யாருடையது என்று தெரியவில்லை, ஆனால் நல்லாவே ஒர்க்அவுட் ஆகிடுச்சு.