‘கூலி’ பட விவகாரத்தில் இளையராஜா நோட்டீஸ்: ரஜினியின் அதிரடி பதில்

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இளையராஜா இசையில் ரஜினிகாந்த நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா…’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு டிஸ்கோ டிஸ்கோ என பாடல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது கோலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தற்போது பதிலளித்துள்ளார். வேட்டையன் பட படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற அவர், படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் அவரிடம் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது இளையராஜாவிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலானது” என்றார். மேலும், கூலி பட டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ரொம்ப மகிழ்ச்சி என்றும் வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here