கிள்ளான்:
சிலாங்கூர் எஃப்சி காற்பந்தாட்ட வீரர் பைசல் ஹலீம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று (மே 5) ஒரு ஷாப்பிங் மாலில் பைசல் மீது ஆசிட் வீசப்பட்டது, இதன் விளைவாக அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த ஒழுக்கக்கேடான செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், காவல்துறை இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க ஏதுவாக குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறும் இஸ்தானா ஆலம் ஷா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பைசால் மீதான தாக்குதலை கண்டித்த சிலாங்கூர் பட்டத்து இளவரசரும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவருமான தெங்கு அமிர் ஷா இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.