பேரரசர் தம்பதியினர் சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம்

கோலாலம்பூர்:

மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று சிங்கப்பூர் சென்றடைந்தனர்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் சென்றுள்ள பேரரசர் தம்பதியினருக்கு அரச வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனவரி 31ஆம் தேதி அரியணை ஏறிய பிறகு, இதுவே மாமன்னர் இப்ராஹிமின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாகும்.

அதுமட்டுமல்லாது, சிங்கப்பூரில் தலைமைத்துவமத்ரில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு அவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மே 15ஆம் தேதியன்று சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

மாமன்னரின் இந்தப் பயணம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வலுவான நல்லுறவைப் பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாமன்னருடன் அவரது துணைவியாரான ராஜா ஸரித் சோஃபியா, மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், மூத்த அதிகாரிகள் ஆகியோர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here