ஐபிஎல் 17ஆவது சீசன், 29ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை வான்கடே மைதானம், எப்போதுமே பேட்டர்களுக்கு சாதகமாகதான் இருக்கும். சமீபத்தில் கூட, ஆர்சிபி அடித்த 196 ரன்களை, மும்பை அணி அசால்ட்டாக சேஸ் செய்தது. இதனால், இன்றும் ரன்மழை இருக்கும் எனக் கருதப்பட்டது.
முதலில் களமிறங்கிய சிஎஸ்கேவில், ராசின் ரவிந்திராவுடன் அஜிங்கிய ரஹானேதான் ஓபனராக இருந்தார். பார்ம் அவுட்டில் இருக்கும் ரஹானே, ஓபனராக விளையாடி 5 (8) ரன்களைதான் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு ஓபனர் ராசின் ரவீந்திராவும் படுமோசமாக சொதப்பினார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 21 ரன்களை மட்டும் எடுத்து நடையைக் கட்டினார்.
ஓபனர்கள் சொதப்பியதை தொடர்ந்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். கெய்க்வாட் 40 பந்தில் 69 ரன்களை எடுத்து நடையைக் கட்டினார். தொடரந்து, மிட்செலும் 17 (14) மிக்ஸர் சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஷிவம் துபே, தோனி இருவரும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார்கள். துபே 66 (38) ரன்களை அடிக்க, தோனி கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தி, 4 பந்துகளில் 20 ரன்களை எடுத்ததால், சிஎஸ்கே 206/4 ரன்களை எடுத்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா 105 (63) அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும், இஷான் கிஷன் 23 (15), திலக் வர்மா 31 (20) போன்றவர்களை தவிர யாரும் 20+ ரன்களை எடுக்கவில்லை. இதனால், மும்பை அணி 20 ஓவர்களில் 186/6 ரன்களை சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.